Posts

Showing posts from April, 2021

இயல் 3: காரணவினைத் தன்மை

இயல்-3 காரண வினைத் தன்மை           முதல் இரண்டு இயல்களில் தமிழில் இயக்கு வினைகள் அவற்றின் இயங்கு வினைகளுடன் பொருண்மை நிலையில் காரண வினை உறவு கொண்டவை அல்ல என்பது தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டது. இயக்கு வினைகளுடன் இயங்கு வினையின் எதிர்மறை வடிவங்களைக் கொண்டு ஆக்கப்படும் தொடர்கள் வழுவற்ற தொடர்களாக அமைந்தது கொண்டு அவற்றில் காரணப் பொருளுறவு அமையவில்லை என்பது புலப்படுத்தப்பட்டது. இதன்வழி, காரணப் பொருள் என்பது இயங்கு வினை-இயக்கு வினைகளின் பொருளாக அமையவில்லை எனலாம்.           முதல் இயலில் வினைகளில் மூன்றாவது பிரிவு இருப்பது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அவை, சொல்லியல் நிலையில் காரண வினைகளாகும். இந்த இயலில் இவ்வாறான சொல்லியல் நிலையில் அமைந்த காரண வினைகளைப் பற்றியும் செய், வை போன்ற துணை வினைகளைக் கொண்டு தொடரியல் நிலையில் உருவாகும் காரண வினைகளைப் பற்றியும் விளக்கப்படும். ஆங்கிலத்தில் 'Cause' என்னும் வினைச்சொல் வெளிப்படையாக வந்து காரணப் பொருளை உணர்த்துவது போன்று தமிழில் அதற்கு இணையான வினைவடிவம் இல்லை என்பது கருதத்தகுந்தது. சொல்லியல் நிலையில் அமைந்த காரண வினைகள்           தமிழில்